Skip to main content

கொலை வழக்கின் சாட்சி மர்ம மரணம்

Published on 01/09/2017 | Edited on 01/09/2017
கொலை வழக்கின் சாட்சி மர்ம மரணம்

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரப்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வராஜ். நேற்று இரவு மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த செல்வராஜ் இதே ஊரில் கடந்த 2003-ஆம் ஆண்டு காதல் கலப்பு திருமணம் செய்ததால் கொல்லப்பட்ட முருகேசன் - கண்ணகி வழக்கின் சாட்சியாவார்.

இவ்வழக்கின் சாட்சிகள் விசாரணை கடலூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே  முருகேசனின் தந்தையார் சாமிக்கண்ணு, தம்பிகள் வேல்முருகன், பழனிவேல் ஆகியோர் சாட்சியம் அளித்துள்ளனர். 



இந்நிலையில் செல்வராஜ் இன்று சாட்சியம் அளிப்பதாக இருந்த சூழலில் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும், முருகேசன் - கண்ணகி கொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு செல்வராஜ் சாவில் தொடர்புபுடையதாகவும், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி செல்வராஜ் மனைவி கஸ்தூரி விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் உறவினர்கள் நூற்றுக்கும்  மேற்ப்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

-சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்