இரகசியங்களை வெளியிட்டால் எனது உயிருக்கு பாதுகாப்பு இருக்காது: அதிமுக எம்.பி. பரபரப்பு பேட்டி!
அதிமுகவில் மூன்று பேரும் ஓன்று சேரவில்லை என்றால் பல ரகசியங்களை வெளியிட வேண்டியிருக்கும் எனவும் இரகசியங்களை வெளியிட்டால் தனது உயிருக்கே பாதுகாப்பு இருக்காது எனவும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜ் (தினகரன் அணி) கோவையில் செய்தியாளகளிடம் தெரிவித்தார்.
கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜின் கார், பீளமேடு அருகே இன்று காலை அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. காரில் அவரது மகன் கல்லூரிக்கு சென்று கொண்டு இருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது.இந்நிலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த எம்.பி.நாகராஜ் , விபத்து நடந்த இடத்திற்கு நேராக சென்று பார்வையிட்டார். பின்னர் விபத்து குறித்து கார் ஓட்டுனர் மற்றும் காவல் துறையினரிடம் கேட்டறிந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அதிமுகவில் அணிகள் என்று கிடையாது என தெரிவித்த அவர், கருத்து வேறுபாடுகளால் மட்டுமே பிரிந்து இருக்கின்றோம் எனவும் அனைத்து தரப்பினரும் ஓன்றாக அமர்ந்து பிரச்சினைகளை பேசித்தீர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.ஜெயலலிதாவின் ஆன்மா அனைவரையும் சண்டை போடச்சொன்னதா என கேள்வி எழுப்பிய அவர், குற்றச்சாட்டுகளை கூறுபவர்களும், கருத்து வேறுபாடு இருப்பவர்களும் ஓதுங்கிக்கொள்ளுங்கள் எனவும் தெரிவித்தார்.
ஜெயா டி.விக்கான பணிகளை 5 ஆண்டுகளாக தான் கவனித்து வந்ததாக தெரிவித்த அவர் , அனைவரும் ஓன்று சேர வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார். அனைவரும் இணைய வேண்டும் என்பதற்காகவே தன்னை போன்றவர்கள் அமைதியாக இருப்பதாகவும் ஆனால் தங்களை ஓதுக்கி வைத்து விட்டு செயல்படுவதாகவும் தெரிவித்த அவர், மூன்று பேரும் ஓன்று சேரவில்லை என்றால் பல ரகசியங்களை வெளியிட வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்தார்.
ஜெயலலிதா மீது போடப்பட்ட வழக்கில் கூட்டு சதி என்ற பிரிவு சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் , வழக்கிற்காகவே சசிகலா, சில காலம் விலக்கி வைக்கப்பட்டு இருந்தார் எனவும் தெரிவித்த அவர் , டிடிவி தினகரன் கட்சிக்காகவே சிறைக்கு சென்றார் எனவும் தெரிவித்தார்.சசிகலாவிடம் கட்சி பதவிக்காக சென்று நிற்காதவர் என எவருமே கிடையாது எனவும் தெரிவித்த அவர் , பல உண்மைகளை வெளியிட்டால் தனது உயிருக்கே பாதுகாப்பு இருக்காது எனவும் தெரிவித்தார்.
கூட்டணிகளை கூட இறுதி செய்தது சசிகலாதான் என தெரிவித்த அவர் , அதிமுகவுடன் கூட்டணி வைத்த கட்சித்தலைவர்கள் யாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சீட்டுகளை முடிவுசெய்தனர் என்பதை தெரிவிக்க வேண்டும் எனவும் நாகராஜன் தெரிவித்தார். இன்று நடந்த விபத்து இயற்கையாக நடந்ததாக இருக்கலாம் அல்லது தன்னை அச்சுறுத்துவதற்காக நடத்தப்பட்டதாக கூட இருக்கலாம் எனவும் நாகராஜன் தெரிவித்தார். அம்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போட்டோவை வெளியிட சொன்னபோது சிங்கத்தை அசிங்கப்படுத்த வேண்டாம் என்று சொன்னவர் சின்னம்மா.
அதிமுக நன்றாக இருக்க வேண்டும். ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரையும் அம்மா ஆண்மா சண்டை போட சொன்னதா. குற்றம் சாட்டபட்டவர்கள் பதவி விலக தயாரா என கேள்வி எழுப்பினார். சாதாரன தொண்டன் வெளியே இருக்கிறான். அஇஅதிமுகவில் தொண்டர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் எனவும் தினகரன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை என்று குறிப்பிட்டார். அஇஅதிமுகவை பொறுத்தவரை ஏழை பங்காளனின் கட்சி ஒருவராலும் வீழ்த்த முடியாது. நான் பல உண்மைகளை சொன்னால் என் உயிருக்கு பாதுகாப்பில்லை. 8 மாதம் அம்மாவின் வீட்டில் உணவு உட்கொண்டேன்.
அரசியல் என்பது சூது. அதை வெல்பவன் தலைவன். போடப்பட்டுள்ள சசிகலாவின் வழக்குகளை திரும்பப்பெற்றால் யார் பொதுச்செயலாளர். குறிப்பாக அம்மா மருத்துவமனையில் இருந்தபோது நான் சின்னம்மாவிடம் அம்மா சிகிச்சை பெற்றுவரும் போட்டோவை வெளியிடலாம் என்றேன் அதற்கு சின்னம்மா சிங்கத்தை அசிங்கப்படுத்த விரும்பவிலலை என தெரிவித்தார். பல சட்டமன்ற உறுப்பினர்கள் மந்திரிகள் நான் சின்னம்மாவினால் பதவி கார் வீடு வாங்கினேன் என்று தைரியமாக சொல்வார்களா. அதிமுகவில் பலமுறை கூட்டணிகட்சிகள் குறித்து சின்னம்மா தான் முடிவெடுத்தார். பொன்னையன் தான் அம்மாவின் வாரிசு என்று சின்னம்மா சொன்னார். ஆனால் தற்போது மாற்றி பேசுவதாக குற்றம் சாட்டினார்.
- அருள்குமார்
- அருள்குமார்