
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் நடித்துள்ள படம் ‘குட்-பேட்-அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். அஜித்துடைய காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு விட்டது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முன்னதாக இப்படத்தில் இருந்து அஜித்தின் லுக் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. அதில் அஜித் மாறுபட்ட தோற்றத்தில் இளமை தோற்றத்தில் இடம் பெற்றிருந்த நிலையில் அது அவரது ரசிகர்களை குஷி படுத்தியது. இப்படம் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் த்ரிஷா இப்படத்தில் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக சிறிய வீடியோ மூலம் படக்குழு வெளியிட்டது.
இந்த நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. டீசரில், ‘ஏ.கே. ஒரு ரெட் டிராகன், அவன் போட்ட ஒரு ரூல்ஸ அவனே பிரேக் பன்னிட்டு வந்திருக்கான்னா... அவன் மூச்சிலேயே முடிச்சிடுவான்’, என்ற வசனத்தோடு ஆரம்பிக்கிறது. பின்பு வெவ்வேறு கெட்டப்புகளில் அஜித் தோன்றுகிறார். அதே போல் அஜித்தின் முந்தைய பட ரெஃபரன்ஸ்கள் இதில் நிறைய இடம்பெற்றுள்ளது. அஜித் ‘நாம எவ்ளோதான் குட்டா இருந்தாலும் இந்த உலகம் நம்மள பேடாக்குது’, ‘வாழ்க்கையில என்னெல்லா பண்ணக்கூடாதோ, சில சமயங்கள்ல அதெல்லாம் பண்ணனும் பேபி’ போன்ற வசனங்களை பேசும் நிலையில் இடையில் கெட்ட வார்த்தையும் பேசுகிறார். ஆனால் அது மியூட் செய்யப்பட்டுள்ளது. இந்த டீசர் தற்போது அஜித் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.