Skip to main content

தமிழகத்தில் கொலை, கொள்ளை! -அச்சமூட்டும் அஸாமியர்!

Published on 02/08/2018 | Edited on 27/08/2018
pa

 

விருதுநகர் மாவட்டம் மாரனேரி அருகில்,  ஜெய விநாயகர் பட்டாசு ஆலையை   குத்தகை அடிப்படையில் நடத்தி வருகிறார் ராஜபூபதி.  கடந்த 31-ஆம் தேதி இரவு, அங்கு தங்கு வேலை பார்த்துவரும் அஸாம் மாநிலத்தைச் சேர்ந்த உசேன் அலியின் குடும்பத்தினரிடையே கைகலப்பு ஏற்பட்டது. அந்தக் குடும்பத்தினரைச் சமாதானப்படுத்துவதற்காக, செல்வராஜ் என்ற ஊழியரை அனுப்பினார் ராஜபூபதி. 

1-ஆம் தேதி இரவு பட்டாசு ஆலை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த டாடா ஏஸ் (TN 67 AM 1080) வாகனத்தைக் காணவில்லை. உசேன் அலி, அவருடைய மனைவி ப்ரீதா பேகம், மகன் பபுல் மற்றும் ஐந்து குழந்தைகள் என, அந்தக் குடும்பத்தில் 8 பேரும் மாயமானார்கள். இதுகுறித்து, மாரனேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ராஜபூபதி. 

 

வாகனம் காணாமல் போனதையும், அஸாம் குடும்பத்தினர் மாயமானதையும் சம்பந்தப்படுத்தி  மாரனேரி காவல் நிலையத்தில் விசாரணை நடந்தபோது, அன்று சமாதானப்படுத்தச் சென்ற செல்வராஜும் திரும்பி வரவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. 

 

ரெங்கசமுத்திரப்பட்டியைச் சேர்ந்த திமுக அனுதாபியான செல்வராஜ்,  “கலைஞரைப் பார்க்க வேண்டும்; காவேரி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.” என்று கடந்த சில நாட்களாக புலம்பி வந்திருக்கிறார். அதனால், அவர் சென்னை சென்றுவிட்டதாக அவரது குடும்பத்தினர் கருதினர். ஆனால், 2-ஆம் தேதி,  பக்கத்தில் உள்ள ஒரு தோட்டத்தில், பயன்பாடற்ற கிணற்றில் பிணமாக மிதந்தார் செல்வராஜ். 

 

தங்களின் குடும்பச் சண்டையை விலக்கி வைப்பதற்காக வந்த செல்வராஜை அடித்தே கொன்றிருக்கிறார்கள் அந்த அஸாம் குடும்பத்தினர். பிணத்தைக் கிணற்றில் வீசிவிட்டு, மறுநாள் இரவு, டாடா ஏஸ் வாகனத்தைத் திருடி, மொத்த குடும்பத்தினரும் தப்பிச் சென்றுவிட்டனர். உசேன் அலி, அவருடைய மகன் பபுல் மற்றும் மொத்த குடும்பத்தினரையும், காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.   

 

தமிழ்நாட்டிலேயே, சண்டையை விலக்க முயற்சிக்கும்போது, அடி வாங்குபவர்கள் உண்டு. ‘எங்கள் குடும்பச் சண்டையில் தலையிடுவதற்கு நீ யார்?’ என்று ஆத்திரத்தில் அடிப்பார்கள். அஸாம் கலாச்சாரம் செல்வராஜுக்கு எப்படி தெரியும்? ஆனாலும், முதலாளி ராஜபூபதி சொன்னதால், சமாதானப்படுத்துவதற்கு சென்றிருக்கிறார். தங்களுக்கு நல்லது செய்ய வந்தவரைக் கொலை செய்துவிட்டார்கள் அந்த அஸாம் குடும்பத்தினர். 

 

வடமாநிலத்தவர் வன்செயல்!

பிழைப்புக்காக தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர் சிலரால் அங்கங்கே பிரச்சனைகள் ஏற்படுவது உண்டு. மதுரையில் நகைக்கடை ஒன்றில் 5 வருடங்கள் வேலை பார்த்து, உரிமையாளர்களின் நம்பிக்கையைப் பெற்று,   கிலோ கணக்கில் தங்கத்தைத் திருடி எஸ்கேப் ஆன வடமாநிலத்தவர்கள் உண்டு. தமிழகத்தில்,  வடமாநிலத்தவர் சிலர் திருட்டு காரியங்களில் ஈடுபட்டு வருவதே கலக்கத்தை ஏற்படுத்திவரும் நிலையில், மாரனேரியில் கொலை நடந்திருப்பது, பெரும் பீதியை உண்டாக்கியிருக்கிறது. 

 

ub

அஸாமியர் என்றாலே அச்சம்தான்!  கோவையில் அஸாம் தீவிரவாதிகள் உபேன்புஷன் மத்தேரி, பிக்காரம் பாசுமத்தேரி பிடிபட்டனர்.  ஓசூரில் அஸாம் கொள்ளையர்கள் 5 பேர் வீடு புகுந்து திருடியபோது, சச்சு என்பவன் மாட்டிக்கொண்டான். அவனைக் கம்பத்தில் கட்டிவைத்து அடித்த மக்கள், காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதுபோன்ற சம்பவங்கள் நிறைய நடக்கின்றன. 

 

sa

 

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் பணியாற்றிய அனுபவத்தில், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் இப்படிச் சொன்னார் - 

“ஒரே தேசம்தான்! நமது இந்தியச் சகோதரர்கள்தான்! ஆனாலும், வடமாநிலத்தவர் விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருப்பதே நல்லது!”

சார்ந்த செய்திகள்