ஊட்டி கோத்தகிரியில் ரோஸ்காட்டேஜ் பகுதியில் வசித்து வரும் தம்பதிகள் ராஜசேகர் லோகேஸ்வரி. இவர்களுக்கு 3 வயதில் கார்த்திகேயன் என்ற மகன் உள்ளார். சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த ராஜசேகர் அண்மையில் பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்தார். ரோஸ் காட்டேஜில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
அந்த வீட்டில் தற்போது லோகேஸ்வரி மட்டும் மகன் கார்த்திகேயனுக்கு வசித்து வருகிறார். வார இறுதி நாட்களில் மகேஸ்வரியின் பெற்றோர் அவரையும் அவரது பேரனையும் காண வருவது வழக்கம். அதேபோல் நேற்று லோகேஸ்வரியின் பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் வெளிபக்கம் தாளிடப்பட்டிருப்பதை பார்த்த பெற்றோர் லோகேஸ்வரி எங்கேனும் வெளியே சென்று இருக்கலாம் என்று நினைத்து சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து இருந்தனர். ஆனால் ரொம்ப நேரம் ஆகியும் லோகேஸ்வரி வராததால் வீட்டின் பின்பக்க ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளனர். அப்போது லோகேஸ்வரி கொலையுண்ட நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது லோகேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அவரது மகனும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்தனர். உடனடியாக சிறுவன் கார்த்திகேயனை போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் உயிரிழந்த நிலையில் இருந்த லோகேஸ்வரி உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மகேஸ்வரியின் மொபைல்போன் அப்போது ஆப் செய்யப்பட்டுள்ளதால் அதைக் கைப்பற்றிய போலீஸார் மொபைல் போனை ஆன் செய்து இறுதியாக அவருக்கு வந்த கால்கள் போன்றவற்றை சோதித்து வருகின்றனர். கொலை வீட்டில் நடந்ததால் ஏற்கனவே பரிச்சயமான ஒருவரால்தான் இந்த கொலை நிகழ்த்தப்பட்டிருக்கும் என்று சந்தேகத்தையும் இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் அவரது கழுத்தில் இருந்த ஐந்து சவரன் தாலி களவாடப்பட்டு இருப்பதால் இந்த கொலை தாலிச்சங்கிலி பறிப்புக்காக நடந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகித்தனர். தாய் மற்றும் மகனின் கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் கோத்தகிரியில் பெரும் அச்சத்தையும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.