தாங்கள் வைத்த கோரிக்கைகள் தொடர்பாக 10 நாட்களுக்குள் அரசாணைகள் வெளிவராவிட்டால் 01.08.2018 முதல் சென்னையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்திடப்படும் என ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கூறியதாவது,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைப்பெற்றது. 11.07.2018 மாநில நிர்வாகிகள் மற்றும் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்களுடன் அரசு நடத்திய இரண்டு கட்ட பேச்சு வார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுரு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்கும் கோப்பு தலைமைச் செயலக விதிகளின் படி அரசாணை பிறப்பிக்க தலைமைச் செயலாளர் இசைவு தெரிவித்து ஒப்பம் இட்டுள்ளார்.
கணிணி உதவியாளர்களுக்கு அரசு தேர்வாணையத்தினஎ மூலம் தேர்வு நடத்த, நீதிமன்றத்தில் தடையேற்படுத்தியுள்ள நிலையில், அரசு இயக்குநர் அட்வகேட் சென்ட்ரல் அவர்களிடம் உரிய விளக்கம் பெற்று விரைவில் தேர்வு நடத்திட இயக்குநர் முழு முயற்சி எடுப்பதாகவும் முழுசுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதிய உயர்வு கோப்பு இன்று இயக்குநரகத்திலிருந்து தாயாரிக்கப்பட்டதாகவும் பணிப்பார்வையாளர்களுக்கு மதிப்பீடு ரூ 5 இலட்சம் அதிகப்படுத்தும் மற்றும் உதவிப் பொறியாளர்களுக்கு தொழில் நுட்ப அனுமதி வழங்கும் அதிகார உட்ச வரம்பை 5 இலட்சமாக உயர்த்த உரிய கோப்பு அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் கோப்பு அரசுக்கு அனுப்பப்பட்ட நிலையில், மற்ற பணி நெருக்கடி உள்ள இதர கோரிக்கைகள் குறித்து அரசிடம் விரிவாக பேசப்பட்டு அரசும் ஒத்துக் கொண்ட நிலையில் (03.07.2018 முதல் 12.07.2018) வரை 10 நாட்கள் நடைபெற்ற காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மாநில மைய அறிவிப்பின்படி விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.
10 நாட்களுக்குள் பலவேறு கோரிக்கைகளுக்கு அரசாணைகள் வெளியிடுவதாக ஊரக வளர்ச்சி அரசு செயலாளர் மற்றும் இயக்குநர் ஒப்புக்கொண்டுள்ளனர் 10 நாட்களுக்குள் அரசாணைகள் வெளிவரா விட்டால் 01.08.2018 முதல் சென்னையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்திடப்படும் என மாநில மையம் மற்றும் ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது என தெரிவித்தனர்.