ஈரோடு சி.என்.சி காலேஜ் அருகே கொத்துக்காரர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மேகலா (49). கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகள் ஜனனி. மேகலாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஜனனிக்கு திருமணம் ஆகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தாய் மேகலா வீட்டிற்கு வந்துவிட்டார் ஜனனி. தனது மகள் கணவருடன் கோபித்துக் கொண்டு வந்ததால் மேகலா கடந்த சில நாட்களாகவே மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கேரளாவிற்கு ஒரு விசேஷத்திற்காக ஜனனி சென்றுவிட்டார். வீட்டிலிருந்த மேகலா திடீரென மாயமானார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மேகலா தங்கி இருக்கும் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் மேகலா கிடந்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர், முன்பே மேகலா இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.