Skip to main content

“இனத்தின் அடையாளம் தாய்மொழி” - உலக தாய்மொழி தினத்தில் முதலமைச்சர் வாழ்த்து

Published on 21/02/2023 | Edited on 21/02/2023

 

"Mother language is the identity of the race" greetings of the Chief Minister

 

தாய்மொழிகளின் அவசியத்தையும் அதன் சிறப்புகளையும் மக்களுக்கு எடுத்துரைக்க பிப்ரவரி 21 ஆம் தேதி சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. 

 

1999 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதியை உலகத் தாய்மொழி தினமாக கொண்டாட யுனெஸ்கோ அமைப்பினால் நடத்தப்பட்ட பொதுமாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து, 2000 ஆம் ஆண்டில் இருந்து உலக தாய்மொழிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்தாண்டு கொண்டாடப்படும் தாய்மொழிகள் தினத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

 

இந்நிலையில்  உலக தாய்மொழி தினம் குறித்து ட்வீட் செய்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தாய்மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம் - உயிர்! உயிர் கொடுத்து உயிர் காத்த இனம், நம் தமிழினம்! தொன்மையும் காலத்துக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனும் ஒருங்கே பெற்ற நம் தாய்மொழியாம் தமிழைக் காப்போம்! தமிழின் உயர்வை நானிலமும் நவிலச் செய்வோம்!” எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்