Skip to main content

ரெய்டில் சிக்கிய ரூபாய் 1.80 லட்சம்! நடவடிக்கை எடுக்குமா துறை தலைமை?

Published on 29/12/2018 | Edited on 29/12/2018
Money


 

 

திருவண்ணாமலை வட்டம் சார்பதிவாளர் அலுவலகம் 2ல் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் டி.எஸ்.பி. சரவணகுமார், காவல் ஆய்வாளர் அருள் பிரசாத் ஆகியோர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு டிசம்பர் 28ஆம் தேதி இரவு திடீர் சோதனை நடத்தினர். 

 

ஒரு பத்திரப் பதிவுக்கு ரூபாய் 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கேட்பதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது. 

 

விசாரணைக்கு உள்ளே நுழைந்ததும், அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் அதிர்ச்சியாகி லஞ்சப் பணத்தை அலுவலகத்திற்கு வெளியே வீசினர். லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்திற்கு வெளியே வீசப்பட்ட ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

 

மேலும் தொடர்ந்து சோதனை மேற்கொண்டதில், ரூபாய் 84 ஆயிரம் பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூபாய் 1.80 லட்சத்துக்கு கணக்கில்லை. இதுதொடர்பாக சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகளிடம் தொடர்ந்து நள்ளிரவு வரை விசாரணை நடைபெற்றது. இது தொடர்பாக பத்திரப்பதிவு துறை தலைமைக்கு புகார் தெரிவித்து விசாரணை நடத்தச் சொல்லியுள்ளதாக தெரிவிக்கின்றனர் லஞ்ச ஒழிப்பு போலிஸார்.

 

 

 

சார்ந்த செய்திகள்