இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் கடந்த இரண்டு தினங்களாக மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினார்கள். முதல் நாளான நேற்று சீன அதிபர் மாமல்லபுர சிற்பங்களை பிரதமர் மோடியுடன் இணைந்து ரசித்தார். இன்று காலை மாமல்லபுரம் கடற்கரையில் வாக்கிங் சென்ற பிரதமர் மோடி கடற்கரையில் சிதறிக் கிடந்த குப்பைகளை அள்ளினார். கையில் க்ளவுஸ் இல்லாமல், காலில் செருப்பு போடாமல், கையில் ஒரு பிளாஸ்டிக் பையை (தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது) வைத்துக் கொண்டு குப்பைகளை பொருக்கியது இந்திய அளவில் வைரலானது.
"குப்பையை கீழே வீசும்போது, இனி தமிழக மக்களின் மனதில் மோடி வருவார் என்பதில் சந்தேகமில்லை. இதில் நாம் அரசியல் செய்யக் கூடாது" என்று பாஜக தொண்டர்கள் இணையத்தை அதிரவைத்து ஒருபுறம் என்றால், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவரை வைத்துக்கொண்டு குப்பைகளை அள்ளுவதுதான் தூய்மை இந்தியா திட்டமா? அல்லது புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க பிளாஸ்டிக்தான் வசதியாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா மோடி? என்றும் ஒரு சாரார் டுவிட்டரில் அவரிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.