நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
சிட்லபாக்கம் பேரூராட்சி 12வது வார்டு கண்ணகி தெருவில் தண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுதொடர்பாக பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எடுக்கவில்லை. இந்நிலையில், அப்பகுதி பொதுமக்கள் சார்பில் தாம்பரம் திமுக எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜாவிடம் தண்ணீர் பற்றாக்குறையை போக்க நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சம் ஒதுக்கப்பட்டு புதிய நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதை எஸ்.ஆர்.ராஜா திறந்து வைத்தார்.