Published on 31/10/2022 | Edited on 31/10/2022
![மநவ](http://image.nakkheeran.in/cdn/farfuture/ei5clZEjGp7tUoRmlU0CqT-TZxBkzFnitYAZZQh0N3A/1667238155/sites/default/files/inline-images/LKLK.jpg)
தமிழ்நாட்டிற்கு வரவுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்துப் பேச உள்ளார்.
தமிழகத்திற்கு வரும் 2ம் தேதி வரவுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் இல.கணேசன் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் அவர் அன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழக முதலமைச்சர் இல்லத்திற்குச் செல்ல உள்ளார். தனிப்பட்ட சந்திப்பாக இருந்தாலும் இதில், வரும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக இருவரும் பேச வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.