தமிழக அரசின் செயல் ஆளுக்கொரு நீதி வேளைக்கொரு நியாயம் என்பதையே தெளிவாக்குகிறது என கருணாஸ் கைது குறித்து தனது கண்டனத்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எப்போதும் வரம்பு மீறி பேசுவது யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது அந்த கருத்திற்கு இருவேறு கருத்து இல்லை ஆனால் தான் பேசியதற்காக கருணாஸ் வருத்தத்தை பதிவு செய்துள்ளார். அவர் தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்தபோதிலும் அவர் கைது செய்யப்பட்டிருப்பது அரசின் ஆளுக்கொரு நீதி வேளைக்கொரு நியாயம் என்பதையே வெளிச்சம் போட்டுகாட்டுகிறது.
தந்தை பெரியார் சிலையை உடைப்பேன் என்றும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் அவதூறாக பேசிய எச்.ராஜா, பெண் பத்திரிகையாளர்களை தவறாக பேசிய எஸ்.வி.சேகர் ஆகியோருக்கு ஒரு சட்டம் கருணாஸுக்கு ஒரு சட்டமா? இந்த போக்கு மிகவும் அநீதியானது எனக்கூறியுள்ளார்.