Skip to main content

ரூ. 57.74 லட்சம் இழப்பீடு வழங்க அப்போலோ மருத்துவமனைக்கு நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவு!

Published on 13/09/2018 | Edited on 13/09/2018

 

apollo

 

ரூ. 57.74 லட்சம் இழப்பீடு வழங்க அப்போலோ மருத்துவமனைக்கு நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் பெஜ்ஜிபூரை சேர்ந்த நரசிங்க பதி, குரி பதி ஆகியோரின் மகனான அபானிகுமார் பதி சென்னையில் உள்ள டாக்டர் ரெட்டி லேபரட்டரியில் மாதம் 30 ரூபாய் ஊதியத்தில் பணியாற்றி வந்தார். மூல நோய் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 2003ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு உடல் நலம் மோசமாக இருப்பதாக அவரது நண்பர்களுக்கும், பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவரது பெற்றோர் அபானிகுமாரை பார்க்க அனுமதி மறுத்ததுடன்,  வென்டிலேட்டரில் வைத்திருப்பதாகவும், மயக்க மருந்து கொடுத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் நவம்பர் 2-ஆம் தேதி திடீர் மாரடைப்பு, மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக மயக்கவியல் நிபுணரும், அறுவை சிகிச்சை நிபுணரும் தெரிவித்துள்ளனர். பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் மதியம் 1 மணி அளவில் அவர் இறந்துவிட்டதாக கூறி 15 நாட்கள் அளித்த  சிகிச்சைக்காக வழங்கப்பட்டதற்காக 3 லட்ச ரூபாயும் வசூலித்துள்ளனர்.



தனது மகனின் மரணத்துக்கு  மருத்துவமனையின் சேவை குறைபாடும் மற்றும் மருத்துவர்களின் அலட்சியமுமே காரணம் என்பதால் 96 லட்ச ரூபாய் இழப்பீடு கோரி சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு  உறுப்பினர்கள் கே.பாஸ்கரன், எஸ்.எம்.முருகேசன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அவானி குமாருக்கு திடீர் மூச்சுத் திணறல் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதற்கு  சிகிச்சை அளித்ததாகவும் அதன் பலன் இல்லாமல் போகவே அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இதில் மருத்துவ கவனக்குறைவோ அல்லது சேவை குறைபாடோ ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.


இருதரப்பு வாதங்களையும் கேட்டு, ஆவணங்களை ஆராய்ந்த உறுப்பினர்கள், அபானி குமாருக்கு எப்பொழுது மாரடைப்பு ஏற்பட்டது, என்ன மாதிரி சிகிச்சை வழங்கப்பட்டது, மயக்க மருந்து ஏன் கொடுக்கபட்டது என்பது தொடர்பான விவரங்களை முழுமையாக அப்போலோ மருத்துவமனை நிரூபிக்கவில்லை என சுட்டிக் காட்டியுள்ளனர்.



அபானிகுமாரின் மரணத்திற்கு மருத்துவமனை, மருத்துவர்களே காரணம் என  தீர்மானிப்பதாகவும், அதனால் அவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க அப்போலோ மருத்துவமனை மற்றும் இரு மருத்துவர்களுக்கு உத்தரவிட்டனர். அதன்படி அபானிகுமாரின் மரணத்திற்கு இழப்பீடாக 44 லட்சத்து 64 ஆயிரம் ரூபாயும், பெற்றோர்களின் மன உளைச்சலுக்கு 10 லட்ச ரூபாயும், அவர்கள் செலுத்திய 3 லட்ச ரூபாய்யும், வழக்குக்காக செலவு செய்ததாக 10 ஆயிரம் ரூபாயும் சேர்த்து 57 லட்சத்து 74 ஆயிரம் ரூபாயை மருத்துவமனையும், இரு மருத்துவர்களும் வழங்க உத்தரவிட்டுள்ளனர். 



இந்த தொகையை வழக்கு தொடர்ந்த நாளிலிருந்து 6 சதவீத வட்டியுடன் 4 வாரத்தில் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.  

சார்ந்த செய்திகள்

Next Story

2014ல் பலியான இளைஞர்; ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

Rs. 25 lakh Madurai High Court Branch Order to pay compensation who passed away youth in 2014

 

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அங்கப்பன் எனும் விக்னேஷ். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது நண்பர்களுடன் அருணாச்சல மலையில் கிரிவலம் சுற்றி வந்து கொண்டிருந்தார். அப்போது, சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த பதாகை ஒன்று விக்னேஷ் தலையில் விழுந்தது. உடனடியாக, அவரது நண்பர்கள் விக்னேஷை கோவில் மருத்துவ முகாமுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், விக்னேஷ் மின்சாரம் தாக்கி உயிரிழந்துவிட்டதாகக் கூறினர்.

 

பதாகை விழுந்ததால் தனது மகன் இறந்துவிட்டார் என மகனின் இழப்புக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி விக்னேஷின் தந்தை, மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று அளித்தார். இது தொடர்பான மனு, நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, “விக்னேஷின் மரணத்திற்கு பதாகை விழுந்தது தான் முக்கிய காரணம் என்று கருத முடியாது. இருந்தாலும், பதாகை முறையாக நிறுவப்பட்டுள்ளதா என்பதை உள்ளாட்சி அமைப்பு உறுதி செய்ய வேண்டும். 

 

தமிழகத்தில் பாதுகாப்பற்ற முறையில் பதாகைகளை நிறுவியதால் சில உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதையும் நான் எனது கவனத்திற்கு கொண்டு செல்கிறேன். மேலும், லட்சக்கணக்கான பக்தர்களைக் கொண்டுள்ள இந்த திருவண்ணாமலை கோவில் பக்தர்களின் நலனுக்காக பல ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதனால், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகமும் உள்ளாட்சி அமைப்பும் பொறுப்பில் இருக்கிறது என்பதையும் கூறிக்கொள்கிறேன்” என்று கூறினார். அதனைத் தொடர்ந்து,  பாதிக்கப்பட்டவரின் படிப்பை கவனித்த நீதிபதி, பாதிக்கப்பட்டவருக்கு நான்கு வாரங்களுக்குள் ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

 

 

Next Story

பிரதமர் மோடியின் சகோதரர் அப்போலோவில் அனுமதி

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

 PM Modi's brother is allowed in Apollo

 

பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் மோடி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சிறுநீரகப் பிரச்சனை காரணமாக சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் மோடியின் சகோதரர் குடும்பத்தார் ஆறு பேருடன் பெங்களூர் வந்திருந்த பொழுது பந்திப்பூர் வனவியல் பூங்கா அருகே அவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் அனைவரும் சிறு காயங்களுடன் தப்பித்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.