Skip to main content

‘அவசரகதியில் வழக்கு தொடரக்கூடாது! -உயர்நீதிமன்றம் அறிவுரை!

Published on 01/11/2019 | Edited on 01/11/2019

மதுரை மகபூப்பாளையத்தை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன்.இவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில்,

 

not sue in an emergency! -High Court Advice!

 

‘நான் சட்டக்கல்லூரியில் எல்.எல்.பி. படித்து வருகிறேன். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் போதுமான கழிப்பறை, குடிநீர் வசதிகள் இல்லை. டாக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர் பற்றாக்குறையும் நிலவுகிறது. இதைச் சரி செய்ய வேண்டும். எலும்பு வங்கி ஏற்படுத்த வேண்டும். மின்சாதனங்களால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, முறையாகப்  பராமரித்திட வேண்டும் என்று அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தேன். நடவடிக்கை இல்லை. எனவே மனு அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று  குறிப்பிட்டிருந்தார்.

 

not sue in an emergency! -High Court Advice!


இவ்வழக்கை  ஏற்கனவே விசாரித்த  உயர்நீதிமன்றம், மனுதாரர் ஆஜராக உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஆஜரானார். நீதிபதிகள், “இங்கு வழக்கு தொடர்வதற்கு முன்பாக, தங்களது புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவகாசம் அளிக்க வேண்டும். அவசர அவசரமாக வழக்கு தொடரக்கூடாது. முழுமையாக ஆராய்ந்து அதன்பின்தான் வழக்கு தொடர வேண்டும்.” என்று கூறி  வழக்கை முடித்து வைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்