Skip to main content

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வாங்கித் தருவதாக கூறி பல கோடி மோசடி: போலி அதிகாரி கைது

Published on 15/04/2018 | Edited on 15/04/2018
Fake officer arrested




சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியை அடுத்த அன்பு என்கிற அன்பழகன் தன்னை குடிசை மாற்று வாரிய அதிகாரி என கூறிக்கொண்டு செம்மஞ்சேரி மற்றும் சோழிங்கநல்லூரில் கட்டப்பட்டு வரும் அரசு குடிசை மாற்று குடியிருப்பை பெற்றுத்தருவதாக சொல்லி அப்பகுதி மக்களிடம் இரண்டு லட்சம் முதல் 5 லட்சம் வரை 103 பேரிடம் வசூல் செய்துள்ளார்.
 

பணம் கொடுத்தவர்கள் அழுத்தம் கொடுத்ததன் காரணமாக இவர் ஏற்பாடு செய்து வைத்திருந்த ஸ்ரீராம் என்பவரை சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் வெளியே அடிக்கடி சந்திக்க வைத்து நம்ப வைத்து வந்தார். மேலும் சிலர் அழுத்தம் கொடுத்த காரணத்தினால் வீடு ஒதுக்கப்பட்டதாக கூறி போலி ஆவணங்கள் தயார் செய்து கொடுத்துள்ளார். இந்த ஆவணத்தை பெற்ற சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டது, பணம் பெற்று இரண்டு, மூன்று வருடங்கள் ஆனதால் சந்தேகப்பட்ட பணம் கொடுத்து ஏமாந்தவர்களில் ஒருவரான திருவான்மியூரைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் சென்னை குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அன்பழகனை பிடித்து விசாரித்தனர். விசாரணையின் அவன் போலி அதிகாரி என தெரிய வந்தது. 
 

ஏற்கனவே கூடுவாஞ்சேரியில் இதேபோன்று பலரிடம் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி சிறைக்கு சென்று வந்தது தெரிய வந்தது. அதன் பிறகு தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த கேரளாவைச் சேர்ந்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்