Published on 01/04/2018 | Edited on 01/04/2018
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று (1-4-2018), சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுச் செயலாளர் இரா.முத்தரசன், நேற்று மன்னார்குடியில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் உடனிருந்தார்.