Skip to main content

கஜாபுயல் நிவாரணத்தை வங்கிக்கடனில் வரவு வைக்கக்கூடாது... -விவசாயிகள்

Published on 28/01/2019 | Edited on 28/01/2019

 

 

கஜாபுயல் நிவாரணத்தை வங்கிக் கடனில் வரவு வைப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்தக் கோரி தமிழ் மாநில விவசாய கூலித் தொழிலாளர் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
 

இதுகுறித்து தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது. "கஜாபுயலால் நாகை திருவாரூர் தஞ்சை புதுக்கோட்டை மாவட்டங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம்  எல்லாம் இழந்து நிற்கதியான சூழலில் உள்ளனர். தமிழக அரசு பாதிக்கப்பட்ட குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள், அரசு தொகுப்பு வீடுகளுக்கும் குறைந்த அளவில் நிவராணமாக வங்கி கணக்கில் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
 

விவசாயிகள் தமக்கு பெரியளவில் வருவாய் தந்த தென்னை மரங்களை இழந்துள்ளனர். அவர்களுக்கும் நிவாரணம் வங்கி கணக்கில் ஏற்றப்பட்டு வருகிறது. அந்தத் தொகையை, மாணவ, மாணவியர்கள் மேல் படிப்பை தொடர வங்கிகளில் பெற்றுள்ள கல்வி கடன், வீடு கட்டுவதற்கு வாங்கப்பட்ட கடன், கிராமப்புற பெண்கள் நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளனர். தவணை தவறிய கடனுக்காக வீடு மற்றும் தென்னை மரங்களுக்கும் வழங்கப்படும். நிவாரணத் தொகையை வங்கியின் கடன் நிலுவைக்காக வரவு வைக்கின்றனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
 

கந்து வட்டிக்காரன் போல் வரவு வைப்பது பாதிக்கப்பட்ட மக்களை வஞ்சிப்பதாகும் கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்டத்தில் நுண்கடன் வழங்கிய நிதி நிறுவனங்கள் கடனை கட்ட நெருக்கடி கொடுத்த நிலையில் நாகை திருவாரூர். தஞ்சை மாவட்ட ஆட்சியர்கள் ஆறு மாத காலத்திற்கு கடன் கொடுத்த நிறுவனங்கள் வசூல் செய்யக்கூடாது என தெரிவித்தும், செய்திகள் வந்தும் தற்போது நெருக்கடி கொடுத்து கடனை வசூலிப்பது வேதனையளிக்கிறது. தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் வங்கிகளுக்கு புயல் நிவாரணத்தை கடனில் பிடித்தம் செய்யக்கூடாது என அறிவித்திட வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்