திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள், ஆதீனங்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை முகாம் அலுவலகத்தில் இருந்து முத்தமிழ் முருகன் மாநாடு குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, “பழனி முருகன் மாநாடு ஆன்மீக மாநாடு கிடையாது. தமிழர் பண்பாட்டு மாநாடு. அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். இந்து சமய அறநிலையத்துறை பொற்காலம் என்றால் அது தி.மு.க ஆட்சியில் தான். 3 ஆண்டுகளில் 1,400 கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.