மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத கனமழையைத் தொடர்ந்து, எண்ணூர் முகத்துவாரப் பகுதிகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இந்நிலையில், அந்த கச்சா எண்ணெய்க் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிகளை இன்று (15-12-23) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “முழுக்க முழுக்க எந்திரங்களின் துணையோடு எண்ணெய்க் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. ஐ.ஐ.டி - அண்ணா பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களின் துணையோடு நவீன தொழில்நுட்பங்கள் மூலம் முழு பாதிப்பும் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், மேலும் எண்ணெய் கழிவுகள் புகாமல் தடுப்பதற்கு மிதவைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் போது, எண்ணூர் முகத்துவாரத்தை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் கோரிக்கைகளை பெற்றோம். கழக அரசு நிச்சயம் அவர்களுக்கான இழப்பீட்டை வழங்கும். மேலும், இனியும் இதுமாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.