திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணைநல்லூர் பகுதி, மேற்கு ஒன்றியமான அருங்குறுக்கை, கொனலவாடி, புதூர் கிராம மக்கள் நீண்டநாட்களாக பேருந்து வசதி செய்துதரக் கோரிவந்தனர். அருங்குறுக்கையிலிருந்து திருவெண்ணைய்நல்லூர் மற்றும் விழுப்புரம் செல்வதற்குப் பேருந்து வசதி வேண்டும் எனவும் திருவெண்ணைநல்லூர் அரசு கல்லூரிக்குச் செல்வதற்குப் பேருந்து வசதி வேண்டியும் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடியிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் வழிகாட்டுதல்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழப்புரம் மேலாண்மை இயக்குநரிடம் திருவெண்ணைநல்லூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர், மாவட்ட கவுன்சிலர் PVR சு. விசுவநாதன் மற்றும் திருவெண்ணைநல்லூர் ஒன்றிய பெருந்தலைவர் ஓம் சிவசக்திவேல் ஆகியோர் மனு அளித்தனர். அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட திருக்கோவிலூர் - திருவெண்ணைநல்லூர் வழியாக சென்னை சென்ற பேருந்துகளான 154A, 154B ஆகிய இரு பேருந்துகளையும் மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்க வேண்டும் என்றும் போக்குவரத்து மேலாண்மை இயக்குநரிடம் தெரிவித்தனர்.
அதற்கு போக்குவரத்து மேலாண்மை இயக்குநர், திருவெண்ணைநல்லூர் வழியாக சென்னை செல்லும் அதே பேருந்தை மீண்டும் இயக்குவதாகவும், மேலும் அருங்குறுக்கை - விழுப்புரம் புதிய வழித்தடத்தைப் பார்வையிட்டு பேருந்து இயக்குவதாகவும் உறுதியளித்தார். இந்நிகழ்வின்போது கட்சி நிர்வாகிகள், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் வெங்கடேசன், ஒன்றிய பொருளாளர் MJ. கிருஷ்ணமூர்த்தி, சிறுவானூர் கலியபெருமாள், அருங்குருக்கை கவுன்சிலர் அஞ்சாயிரம்கோவிந்தன், பாலு, கோதண்டபாணி, ராமலிங்கம், மாசிலாமணி, பேரங்கியூர் சிவா மற்றும் பலர் உடன் இருந்தனர்.