![minister kt rajendra balaji tweet cm edappadi palanisamy mother incident](http://image.nakkheeran.in/cdn/farfuture/MhhXXCSFyKP-nNKN-OX1c9T7IVu734v8LY_gniAZ0yE/1603243675/sites/default/files/inline-images/KT%201%20%281%29.jpg)
இன்று நள்ளிரவு கடந்து, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் வாட்ஸ்-ஆப்பில் இருந்து, கண்ணீர் அஞ்சலி படம் ஒன்று வந்தது.
கடந்த 13- ஆம் தேதி, தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தானைத் தலைவரை பெற்றெடுத்த தாய் தவுசாயம்மாள் மறைந்தார்’ என்று பதிவிட்டிருந்த ட்வீட்டை தொடர்ந்து, தற்போது மேலும் சில வரிகளைச் சேர்த்து, ராஜேந்திரபாலாஜியே எழுதியிருக்கும் வசன நடையிலான கவிதையாம் இது-
![minister kt rajendra balaji tweet cm edappadi palanisamy mother incident](http://image.nakkheeran.in/cdn/farfuture/IG4o-a-WhJ6pU-JsDr7AN4PpIfDrnMRQQLYWF4UIag4/1603243733/sites/default/files/inline-images/a%20%281%29%20%281%29.jpg)
தங்க மாங்கனியைப் பெற்றெடுத்த
தங்கமகள் தவுசாயம்மாள் மறைந்தார்
என்ற செய்தி அண்ணன் எடப்பாடியார்
அவர்களுக்கு மட்டும் பேரிழப்பு அல்ல!
எனக்கும்தான்,எங்களுக்கும்தான்!
சிலுவம்பாளையம் கண்ணீரில்
நனைகிறது. மக்கள் நெஞ்சங்களில்
ஏக்கப் பெருமூச்சு எண்ணங்களை
சிதறடிக்கிறது.
![minister kt rajendra balaji tweet cm edappadi palanisamy mother incident](http://image.nakkheeran.in/cdn/farfuture/GgQmR_4mmfEO3GiLCgtQdMRbtVSSnuXLwpbWlVrMviU/1603243787/sites/default/files/inline-images/b%20%282%29%20%281%29.jpg)
தாயே தவுசாயம்மாள் அவர்களே!
அண்ணன் எடப்பாடியாரை எங்களிடம்
ஒப்படைத்துவிட்டு தமிழ்நாட்டிற்கு
தொண்டு செய்ய ஆணையிட்டுவிட்டு
ஆண்டவனின் திருவடி நிழலில்
இளைப்பாற சென்றாயோ தாயே!
உங்கள் ஆத்மா அமைதியாகட்டும்!
உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்!
வாய்ப்பேச்சில் ‘பொளந்து’ கட்டும் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கவிதையும் எழுத ஆரம்பித்திருக்கிறார்!