"திருவாரூர்,திருப்பரங்குன்றம் இடைத்தோ்தல் குறித்து யார் வேண்டுமானலும் என்ன வேண்டுமானாலும் பேசட்டும் . ஆனால் அதிமுக அரசிற்கு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும் என்பதே அதிமுக அரசின் நோக்கம் அதை வைத்துதான் வெற்றி தோல்வி அமையும்," என்றார் உணவுத்துறை காமராஜ்.
திருவாரூர் நகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காமராஜ், "திருவாரூர் நகர, ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி மற்றும் அடிப்படை தேவைகள் செய்து தரப்பட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கேட்டு கொண்டதற்கு இணங்க அந்த பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறறோம்.
தஞ்சாவூர் – திருவாரூர் – நாகை தேசிய நெடுஞ்சாலை இருவழிபாதை மாற்றம் செய்யும் பணிகள் நிர்ணயக்கப்பட்ட காலத்தை தாண்டி பணிகள் காலதாமத்திற்கு இருவழி சாலை என்பது மேலும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது எனவே ஒரே பணியாக அதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அந்த துறை அமைச்சரிடம் பணிகளை விரைந்து முடிக்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. என்றார் .
அவரிடமே மேலும் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தோ்தலில் திமுக அமோக வெற்றி பெறும் போல தெரிகிறதே என கேட்டதற்கு "இந்த ஆய்வு பணிகள் பொதுமக்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பயணம் இதில் அரசியல் பேசுவது சரியாக இருக்காது. யார் எது வேண்டுமானலும் பேசுட்டும் அதை பற்றி எங்களுக்கு கவலையில்லை பொது மக்களின் தேவைகளை பூாத்தி செய்வதே அதிமுக அரசின் நோக்கம் அதை வைத்தே வெற்றி தோல்விகள் அமையும் ". என அமைச்சர் காமராஜ் தொிவித்தார்.
திருவாரூர் மக்கள் மீது என்ன ஒரு திடீர் கரிசனம் அமைச்சர் காமராஜிக்கு என்கிறார்கள் நகரமக்கள்.