Skip to main content

கூட்டுறவு வார விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் சி.வி. கணேசன்

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

Minister CV Ganesan provided welfare assistance during the Cuddalore Cooperative Week

 

கடலூரில் கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை வகித்தார். இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் கலந்துகொண்டு மாவட்ட அளவில் சிறந்த கூட்டுறவு நிறுவனங்களாகத் தேர்வு செய்யப்பட்ட சிதம்பரம் கூட்டுறவு உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களை பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கினார். இதில் 9830 பயனாளிகளுக்கு 92 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 

 

அப்போது அவர் பேசுகையில், ‘கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளின் முன்னேற்றத்தையும் கிராம பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இதனால் உறவினியோகம், இரு பொருள்கள் விநியோகம், பொதுவிநியோகம் திட்டம் வாயிலாக அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்தல், நகை கடன் மற்றும் இதர கடன் வசதி திட்டங்கள் மகளிர் மற்றும் ஆடவர் குழுக்கள் மூலம் கடன் வழங்குதல் போன்ற சேவைகளை கூட்டுறவு சங்கங்கள் மேற்கொண்டு வருகின்றன இதில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் பணி பாராட்டத்தக்கது எனப் பேசினார்.

 

இந்நிகழ்ச்சியில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன், கடலூர் மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளர் நந்தகுமார், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்