Published on 01/02/2019 | Edited on 01/02/2019

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில்,
கற்றல் குறைபாடுகள் உள்ள குழந்தைகளின் கல்வித்திறனை வளர்க்க ரோபோ மூலம் பாடம் கற்பிக்கும் முறையை பள்ளிகளில் கொண்டுவர வருவதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறையில் புதிய மாற்றத்தை கொண்டுவர அயல்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. எனவே விரைவில் ரோபோ மூலம் பாடம் கற்பிக்கும் திட்டம் நடைமுறைக்கு வரும் எனக்கூறினார்.