Published on 24/09/2018 | Edited on 24/09/2018
![Medical laboratories](http://image.nakkheeran.in/cdn/farfuture/vNTazHqabgXjYrs7Q_3dpZmiIvb4DRXJNPAq6Vz98RE/1537785146/sites/default/files/inline-images/Thirumurugan%20Gandhi.jpg)
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி, நார்வேயிலிருந்து கடந்த 9ந் தேதி பெங்களூரு விமான நிலையம் வந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர். தடையை மீறி ஊர்வலமாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த வழக்கில் ராயப்பேட்டை போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு உடல்நலக் குறைவு காரணமாக அடுக்கம்பாறை மருத்துவமனையில் மருத்துவமனையில் பரிசோதனை நடைபெற்றது. வாயுத்தொல்லை காரணமாக திருமுருகன் காந்திக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.