காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடக்கிறது. இந்தநிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்தக் கூடாது என்று பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தது. சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். போட்டி நடத்தினால் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தன.
இதன்படி, நேற்று பிற்பகல் அணி அணியாக பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அண்ணா சாலையில் திரண்டனர். இதனால், சென்னை அண்ணா சாலை ஸ்தம்பித்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் ஐபிஎல் போட்டி நடத்தக்கூடாது என்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சீமான், கருணாஸ், தமிமுன் அன்சாரி, பாரதி ராஜா, அமீர், தங்கர் பச்சான், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்ணாசாலை, சேப்பாக்கம் மற்றும் மைதானம் அருகே போராட்டம் நடத்திய 780 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கவிஞர் வைரமுத்து, இயக்குனர் பாரதிராஜா, சீமான், கருணாஸ் உள்ளிட்ட 780 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.