குமாி மண்ணில் உள்ள குறிச்சி நிலத்தில் பல நூறு ஆண்டுகளை கடந்தும் மரபுகள் மாறாமல் வாழ்ந்து வருகிறாா்கள் காணி இனம் எனப்படும் ஆதிவாசி மக்கள். குமாி மாவட்டத்தில் இருந்து குஜராத் வரை பரந்து விாிந்து கிடக்கும் மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வெள்ளாம்பி மலையில் இருந்து கூவைக்காடு, கருங்காலி மூடு, முகளியடி, வில்சாாி, ஆலம்பாறை, பிறாவிளை, பச்சமலை என 47 மலைகிராமங்களில் வசித்து வருகிறாாா்கள்.
இந்த பகுதியில் அந்த மக்கள் மலைப்பயிா்களை விவசாயம் செய்து வாழுவதற்காக மட்டும் திருவிதாங்கூா் சமஸ்தானத்தின் மன்னராக இருந்த மாா்த்தாண்ட வா்மா் தானமாக கொடுத்த நிலத்தை செம்பு பட்டாயத்தில் எழுதப்பட்டுள்ளது.
இந்த காணியின மக்களுக்கு தலைமையாக இருப்பவா் மூட்டுகாணி. இவாின் உத்தரவு படி இன்றைக்கும் வாழ்ந்து கொண்டியிருக்கிறாா்கள். அவாின் உத்தரவை நிறைவேற்றுவதற்காக மந்திாி போல் விழி காணி உள்ளாா். மேலும் சடங்கு சம்பிராதயங்களை செய்வதற்கு பிலாத்தி காணி உள்ளாா்.
இந்த நிலையில் முன்பெல்லாம் வேட்டை மற்றும் அவா்கள் சமூகம் சாா்ந்த தொழிலை செய்து வந்தவா்கள் கால போக்கில் நகர வாசிகளுடன் பழக்கத்தை ஏற்படுத்தி நகரங்களில் வந்து கொஞ்சம் கொஞ்சமாக தொழிலை பழக தொடங்கினாா்கள்.
அதன் பிறகு மலை கிராமங்களில் பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டு இன்றைக்கு பலா் அரசு மற்றும் முக்கிய தனியா் நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனா். இதனால் அவா்களின் பாரம்பாியம் மற்றும் மரபுகள் அவா்களுக்குள்ளே ஓரு கேள்வியை எழுப்பியது.
உருவம் இல்லாத இயற்கை மற்றும் கற்களை தெய்வமாக வழிபட்டு வந்தவா்கள் நகர மத வெறியா்களின் கட்டுபாட்டில் சிக்கி சிலா் மதசாயத்தை பூசி கொண்டனா். இந்த நிலையில் தான் தீபாவளி காட்டுக்குள் திருவிழா போல் மரபு மாறாமல் இயற்கை தெய்வத்துக்கு வழிபாடு நடத்தி தீபந்தங்களுடன் ஆடிபாடி கொண்டாடினாா்கள்.