இந்தியாவில் மருத்துவ படிப்பு ஆங்கிலத்திலேயே இதுவரை இருந்து வந்த நிலையில் அதில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சில இடங்களில் இந்த ஆண்டு முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு இந்தியில் பாடப் பிரிவைத் துவங்க முடிவு செய்துள்ளது. அதன் ஒரு கட்டமாக நாட்டில் முதல் முறையாக, மத்தியப் பிரதேசத்தில் இந்தியில் எம்.பி.பி.எஸ் படிப்பை இன்று தொடங்கி வைக்க இருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
மத்தியப் பிரதேசத்தை தொடர்ந்து அனைத்து இடங்களுக்கும் இது விரிவுப்படுத்த வருங்காலங்களில் சாத்தியம் இருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியில் தொடங்கியதை போல் மாநில பிராந்திய மொழிகளில் மருத்துவம் படிக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. இன்னும் சில நாட்களில் இதுதொடர்பான விவாதம் பெரிய அளவில் எழும் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.