தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கொசு புழுக்கள் உருவாகும் பகுதிகளை அடியோடு அழிப்பது, பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்படும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளில் மட்டும் முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு டெங்கு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 2012ம் ஆண்டு 13,204 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே ஆண்டு 66 பேர் டெங்குவால் உயிரிழந்தனர். அதேபோல், 2017ம் ஆண்டு 23,294 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். அந்த ஆண்டு 65 பேர் டெங்குவால் மரணமடைந்தனர். இதுவே தமிழ்நாட்டில் டெங்குவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட நேரம். இதன் காரணமாக தமிழ்நாடு முதலமைச்சர் டெங்குவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டு தடுப்பு நடிவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார்” என்று தெரிவித்தார்.