Published on 08/03/2022 | Edited on 08/03/2022
யூடியூப்பைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வழிமுறைகள் தேவை என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்துச் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று (08/03/2022) நீதிபதி புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, "நாட்டின் பல லட்சம் பேருக்கு யூடியூப் வேலை வழங்கியிருந்தாலும், யூடியூப்பைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வழிமுறைகள் தேவை. யூடியூப் மூலம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும், அதனை பலர் தவறாக உபயோகப்படுத்தி வருகின்றனர்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.