சென்னை தரமணியில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் "ப்ரோட்டான் தெரபி சென்டரை" துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய வெங்கையா நாயுடு பேசியதாவது:-
மருத்துவ துறையில் தனியாரின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது. மக்கள் தொகை பெருகிவரும் சூழலில் மருத்துவத்துறை பல புதிய சவால்களை சந்தித்து வருகிறது. நாட்டில் அரசுடன் சேர்ந்து தனியார் மருத்துவமனைகள் சேவையாற்றவேண்டும். மருத்துவதுறையில தனியாரின் பங்களிப்பு மேலும் அதிகரிக்க வேண்டும். யோகா ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.
இன்றைய இளைஞர்கள் நம்முடைய கலாச்சார முறைகளை பின்பற்ற வேண்டும். நம்முடைய பாரம்பரிய உணவு பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டும். தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகள் உடல் நலத்திற்கு நன்மை பயக்க கூடியது. நமது மூதாதையர் பின்பற்றிய உணவு முறையை நாம் பின்பற்ற வேண்டும்.
செட்டிநாடு சிக்கனுக்கு இணையான அசைவ உணவு உலகில் வேறு எங்கும் இல்லை. மோர்க்குழம்பின் சுவை வேறு எந்த உணவுக்கும் இல்லை. இடியாப்பம், ஆப்பம் போன்ற ருசியான உணவு வகைகள் தமிழகத்தில் மட்டுமே உள்ளன.
தமிழகத்தில் பலவகையான தனித்துவமான உணவுகள் உள்ளன. தமிழகத்தின் ஆப்பத்திற்கு இணையான உணவு உலகத்திலேயே இல்லை. உணவு கட்டுப்பாடு என்பது மிகவும் முக்கியமானது. இட்லி, சாம்பார், வடை, இடியாப்பம் போன்றவை மிகச்சிறந்த உணவுகள். உடனடி உணவுகள் உட்கொள்வது நிரந்தர வியாதிகளுக்கு வழிவகுக்கும். இவ்வாறு பேசினார்.