உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட பகை அதிகரித்து ஊராட்சி ஒன்றிய எழுத்தர் ஒருவரை அதிமுக பிரமுகர் வெட்டிய சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எழுத்தராக இருப்பவர் ராமச்சந்திரன். இவருக்கும் அதே பகுதியில் உள்ள மருதங்குடியை சேர்ந்த அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் அலெக்ஸ்சாண்டர் என்பருக்கும் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பகை ஏற்பட்டு தற்போது வரை முன்விரோதமாக மூண்டபடியே இருந்துள்ளது.
இந்நிலையில் திடிரென ராமசந்திரன் வீட்டில் இருப்பதை தெரிந்துகொண்ட அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் அலெக்சாண்டரும் , அவரது சகோதர் நேதாஜி உள்ளிட்ட மூன்று பேர் வீடு புகுந்து ராமச்சந்திரனை தரக்குறைவாக பேசி மிரட்டினர். வாய் தகராறாக இருந்தது பிறகு வன்முறையாகி அரிவாளால் வெட்டி, இரும்பு பைப்பால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ராமச்சந்திரனை அக்கம் பக்கத்தின் ஒடிவந்து சீர்காழி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சேர்த்துள்ளனர். தலையில் பலத்த காயம் இருந்ததால் பதினேட்டு தையல் போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வைத்தீஸ்வரன்கோவில் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் அலெக்ஸ்சாண்டரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.