மூத்த பத்திரிகையாளரான நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்கள் இன்று காலையில் சென்னை விமான நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்தவிவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நக்கீரன் ஆசிரியர் கைதை கண்டித்து பத்திரிகையாளர்கள், சமுக ஆர்வளர்கள், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில் நக்கீரன் ஆசிரியர் மீது பொய்வழக்கு போட்டுள்ள ஆளும் அதிமுக அரசையும், ஆளுனரையும் கண்டித்து மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்ற பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரத்தில் தமிழ ஆளுநருக்கு தொடர்பு இருப்பதாக தமிழகமே நாறிக்கிடக்கிறது, இதுகுறித்து நக்கீரன் இதழில் தொடர்ந்து கட்டுரைகள் வந்தது. இந்த கட்டுரைகளின் வாயிலாக ஆளுநருக்கு எதிராக அவதூறு பரப்புவதாகவும், ஆளுநரின் பணியில் பத்திரிகை தலையிடுவதாகவும் ஆளுநர் மாளிகையில் இருந்து காவல்துறைக்கு புகார் அளித்ததாக கூறி நக்கீரன் பத்திரிகை ஆசிரியரை இன்று சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர்.
இந்தநிலையில் ஆசிரியரின் கைதைகண்டித்து நாகை மாவட்டம் மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் வாயிலில் கையாளாகத தமிழக அரசே பதவி விளகு, மத்திய அரசின் கைகூலிகளே பதவி விலகு, நடப்பது அதிமுக அரசா பாஜக அரசா, மோடி அரசா, கவர்னர் தாடி அரசா ,நேர்மையான பத்திரிக்கையாளரான நக்கீரன் ஆசிரியரை உடனே விடுதலை செய், என முழக்கமிட்டனர்.
ஆளுநர் ஒருவர் பத்திரிகை மீது புகார் அளித்து பத்திரிகை ஆசிரியர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை என்றும் அங்கு கண்டனத்தில் பதிவுசெய்தனர்.