Published on 23/04/2018 | Edited on 23/04/2018

ஈரோட்டில் நீர் மற்றும் ஆரோக்கியத்தை வலியுறுத்தி ஒளிரும் ஈரோடு, சக்தி மசாலா அமைப்புகள் சார்பில் மராத்தான் ஓட்டம் காலை நடந்தது. மராத்தான் ஓட்டம் ஈரோடு சிஎன்சி., கல்லூரியில் துவங்கி 21 கிலோ மீட்டர் தூரம் ஓடி சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள், வயதானவர்கள் என வயது வித்தியாசமின்றி இந்த மராத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டனர்.