Skip to main content

தொலைபேசி இணைப்பு முறைகேடு; மாறன் சகோதரர்கள் விடுதலை செல்லாது: உயர்நீதிமன்றம்

Published on 25/07/2018 | Edited on 25/07/2018
daya


தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில், மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2004 - 2007 காலக்கட்டத்தில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தவர் தயாநிதி மாறன். அப்போது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சன் தொலைக்கட்சிக்கு பி.எஸ்.என்.எல் அதிவேக தொலைபேசி இணைப்பு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக 2013ல் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

 

 

இந்த வழக்கிலிருந்து முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன், அவரது சகோதர் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறன், பி.எஸ்.என்.எல். பொதுமேலாளராக பதவி வகித்த கே.பிரம்மநாதன், முன்னாள் துணைப் பொதுமேலாளர் வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச்செயலாளர் கவுதமன், சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலெக்ட்ரீசியன் ரவி உள்பட 7 பேரை விடுவித்து கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி 7 பேரையும் விடுவித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து சிபிஐ சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது, அதில் சிபிஐ தரப்பு கோரிக்கை ஏற்கப்பட்டது. 7 பேர் விடுவிக்கப்பட்டது செல்லாது எனவும் மீண்டும் சிபிஐ நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் குற்றச்சாட்டு பதிவை மீண்டும் தொடங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'இன்று நாம் மோடியிடம் ஏமாந்த நாள்'- தயாநிதி மாறன் பரப்புரை

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
'Today is the day we are deceived by Modi' - Dayanidhi Maran campaign

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் திமுக சார்பில் மத்திய சென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 'கண்டிப்பாக வர இருக்கும் தேர்தலில் கடந்த தேர்தலை விட அதிகமான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற செய்வீர்கள் என்று நம்புகிறேன். முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். பத்து ஆண்டுகளாக நரேந்திர மோடி இந்தியாவை ஆண்டார். குறிப்பாக 2021-க்கு முன்பு இங்கிருந்த அடிமை ஆட்சியை வைத்து தமிழகத்திற்கு ஒரு நல்ல காரியத்தையும் செய்யவிடாமல் நம்மை ஏமாற்றி இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இன்று நமக்கு முக்கியமான நாள்.

என்ன நாள்? மோடி நம்மை ஏமாற்றிய நாள் ஏப்ரல் 1. பத்து ஆண்டுகளாக கருப்புப் பணத்தை ஒழித்து ஒவ்வொருவர் அக்கவுண்டிலும் 15 லட்சம் ரூபாய் போடுகிறேன் என்று சொல்லி இதுவரைக்கும் ஒரு ரூபாய் கூட போடாத மோடி தான் இன்று தமிழ்நாட்டுக்கு எட்டு முறை வந்திருக்கிறார். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட போதும் மோடி வரவில்லை. வெள்ளம் வந்த போது தமிழக முதல்வர் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து 'ஐயா நாங்க ரொம்ப கஷ்டப்படுகிறோம். மக்களுக்கு உதவி பண்ண வேண்டும் ஏதாவது உதவி பண்ணுங்க' என்று கேட்டார். உதவி செய்கிறேன் என்று சொல்லி ஏமாற்றினார் மோடி. ஆனால் தமிழக முதல்வர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 6 ஆயிரம் ரூபாய் உதவி தந்தார். தேர்தல் வந்தவுடன் தமிழ்நாட்டின் மீது பாசம், தமிழின் மீது பாசம் ஆனால் துன்பப்படுகிற போது எட்டிப் பாராத மனிதர் தான் மோடி''என்றார்.

Next Story

“படம் பார்த்ததற்கு எனக்கு சொகுசு கார் தந்திருக்க வேண்டும்” - கார்த்திக் ப. சிதம்பரம்

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

Karti p Chidambaram tweet about movie

 

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவர் ப. சிதம்பரம். தமிழகத்தைச் சேர்ந்த இவர் இந்தியாவின் நிதி அமைச்சராகவும் இருந்தவர். இவரது மகனும், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினராகத் தற்போது இருந்து வருபவருமான கார்த்திக் ப. சிதம்பரம். காங்கிரஸ் கட்சி தொடர்பான சில விசயங்களை, விமர்சனங்களை சமூக வலைத்தள பக்கத்தில் மறைமுகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி பதிவிடுவார். ராகுல்காந்தி பாராளுமன்றத்தில் நுழையும்போது எதிரே நின்ற கார்த்திக் சிதம்பரம் கை குலுக்க நீட்டியபோது ராகுல்காந்தி கை கொடுக்காமல் மறுத்து சென்றுவிட்டார். இது சமூக வலைத்தள பக்கத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

 

5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான போது காங்கிரஸ் பின்னடைவை சந்தித்தது. எல்லோரும் வருந்திக் கொண்டிருந்த போது, கார்த்திக் ப. சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘நெட்பிளிக்ஸ்ல பார்ப்பதற்கு நல்ல படம் இருந்தால் பரிந்துரையுங்கள்’ என்று பதிவிட்டிருந்தார். சொந்த கட்சி பின்னடைவை சந்தித்தபோதும் அதையும் மீறி சினிமா பார்க்கும் அளவிற்கு தீவிர சினிமா ரசிகராகவும் இருந்திருக்கிறார். 

 

இந்நிலையில் நேற்று சினிமா தொடர்பாக ஒரு பதிவிட்டிருக்கிறார் அதில், “நேற்று இரவு ஒரு தமிழ் திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பார்த்ததற்கு படத்தின் தயாரிப்பாளர் எனக்கு ஒரு சொகுசு காரை பரிசாக அளித்திருக்க வேண்டும்.” என்று பதிவிட்டிருக்கிறார். சமீபத்தில் ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் சொகுசு கார் பரிசளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் கார்த்திக் ப. சிதம்பரம் ஜெயிலர் திரைப்படத்தைத் தான் கிண்டலடித்திருக்கிறார் என்று சொல்லி ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.