மணிமுத்தாறு தூய்மைபடுத்தும் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்ட மாணவர்கள்
கடலூரில் பல ஆண்டுகளாக மாசடைந்து காணப்பட்ட புண்ணிய நதியான மணிமுத்தாறை தூய்மைபடுத்தும் பணியில் விருத்தாசலம் பகுதி தொண்டு நிறுவனங்களும், மாணவர்களும் ஈடுபட்டனர்.
கங்கையில் மூழ்கி காசியில் விசுவநாதரை தரிசித்தால் கிடைக்கின்ற புண்ணியத்தை விட, விருத்தாசலம் மணிமுத்தாறில் மூழ்கி, விருத்தகிரீஸ்வரை தரிசித்தால் வீசம் புண்ணியம் அதிகமாக கிடைக்கும் என்பதால் “காசியை விட வீசம் பெரிது” என போற்றப்படுவது மணிமுத்தாறு. விருத்தாசலம் நகரின் மையமாக கடந்தோடும் இந்த மணிமுத்தாறு நகரின் கழிவுகளால் அசுத்தமடைந்து காணப்படுகிறது.
மணிமுத்தாறை தூய்மை படுத்தக்கோரி இப்பகுதி மக்களும், பொது நல அமைப்புகளும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதையடுத்து ரோட்டரி சங்கம் மூலம் மலரட்டும் மணிமுத்தாறு எனும் முழக்கத்துடன் தூய்மை பணி என்.எல்.சி நிறுவன ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்டுள்ளது. தூய்மை பணியை என்.எல்.சி நிர்வாக இயக்குனர் சரட்குமார் ஆச்சார்யா தொடங்கிவைத்தார். அதிமுக விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன், ம்ற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பொது நல அமைப்புகளை சேர்ந்தவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் ,பள்ளி மாணவ,மாணவிகள் என சுமார் 2000 த்திற்கும் மேற்பட்டோர் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
- சுந்தரபாண்டியன்