சந்திரயான் 2 விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை மதுரையை சேர்ந்த மெக்கானிக்கல் பொறியாளர் சண்முக சுப்பிரமணியன் கண்டுபிடித்து அசத்தல்.
விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கண்டுபிடித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தது.
மதுரை சேர்ந்த மெக்கானிக்கல் பொறியாளர் சண்முக சுப்பிரமணியன், தான் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து, நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு கூறியுள்ளார். சண்முக சுப்பிரமணியன் சென்னை தரமணியில் உள்ள லினக்ஸ் கணினி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நிலவில் உள்ள தங்களது செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களை நாசா வெளியீட்டு வந்துள்ளது. செப்டம்பர் 17, அக்டோபர் 14,15, நவம்பர் 1 ஆகிய தேதிகளில் நாசா வெளியிட்ட புகைப்படங்களை சண்முக சுப்பிரமணியன் ஆய்வு செய்துள்ளார். நாசாவின் புகைப்படங்களை ஆய்வு செய்வதில் விக்ரம் லேண்டரின் பாகங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். தான் கண்டுபிடித்ததை நாசாவுக்கு இ- மெயில் அனுப்பியுள்ளார். சண்முக சுப்பிரமணியனின் ஆய்வை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் உறுதி செய்து நன்றி தெரிவித்துள்ளனர்.