Published on 27/12/2019 | Edited on 27/12/2019
கடந்த 150 ஆண்டுகளாக அச்சடித்து வந்த கேஸ் லிஸ்ட் என்ற வழக்குகள் பட்டியல் அடங்கிய புத்தகத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
![chennai highcourt decision on case list](http://image.nakkheeran.in/cdn/farfuture/59F9-WBhif3W5OpEdlRKuPIlW4KtMAR_Xyo1TFBBVw4/1577446507/sites/default/files/inline-images/dfggg.jpg)
இதற்கு வழக்கறிஞர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி, கடந்த முறை தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது. அதனால், அப்போதைய தலைமை நீதிபதிகள் நிறுத்தி வைத்தனர். இந்நிலையில் தற்போதைய தலைமை நீதிபதி இதை அமல்படுத்தியுள்ளார்.
மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி தலைமையிலான குழுவினர் பழைய முறை இருக்க வேண்டும், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய முடியாது என தலைமை நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் தலைமை நீதிபதி வழக்கறிஞர் குழுவினரின் கோரிக்கையை ஏற்கவில்லை.