Skip to main content

மதுரை எய்ம்ஸ்; சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கிய தமிழக அரசு

Published on 20/05/2024 | Edited on 20/05/2024
Madurai AIIMS; Tamil Nadu Govt

தென் மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை தற்போது தமிழக அரசு வழங்கியுள்ளது.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய உள்ள நிலையில் அதற்கான கட்டுமான பணிகள் பல ஆண்டுகளாக தொடங்கப்படாமல் இருந்தது. தொடர்ந்து கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்  எல்&டி கட்டுமான நிறுவனம் சார்பாக ஒப்பந்தம் கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து வாஸ்து பூஜைகள் நடத்தப்பட்டு கட்டுமான பணிகள் 33 மாதங்களில்  முடிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியது.

95 படுக்கைகளுடன் 10 தளங்கள் கொண்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதற்கான கட்டுமான பணிகள் தொடங்கியதாக எய்ம்ஸ் நிறுவனம் சார்பாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால் தமிழக அரசு சார்பில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படாமல் பணி தொடங்கியதாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருந்தது. இதற்கு எய்ம்ஸ் சார்பில் இது எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணி அல்ல கட்டுமான பணிமேற்கொள்வதற்கான பொருட்களை வைப்பதற்கான கட்டுமான பணி எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. கொடுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

 தலை துண்டிக்கப்பட்ட இளைஞர்; காதல் விவகாரத்தில் ஆணவக் கொலை

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Youth incident in Madurai over love issue

விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளம் அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் அழகேந்திரன். பட்டதாரியான இவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடிவந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மாற்றுச் சமூக பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 24 ஆம் தேதி மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு அழகேந்திரன் வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த பெற்றோர் கள்ளிக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இந்த நிலையில் அழகேந்திரன் மதுரை மாவட்டம் வேளான்பூர் பகுதியில் உள்ள கண்மாய் அருகே தலை தனியாகத் துண்டிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக போலீசாருக்கும், பெற்றோருக்கும் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அழகேந்திரனின் உடலைக் கைபற்றி பிரேதப்பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், அழகேந்திரன் மாற்றுச் சமூக பெண்ணை காதலித்து வந்துள்ளார். அது அந்தப் பெண்ணின் உறவினரான பிரபாகரன் என்பவருக்குத் தெரியவர உடனே அழகேந்திரனை அழைத்துக் கண்டித்துள்ளார். ஆனால், அழகேந்திரன் காதலைத் தொடர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சம்பவத்தன்று தனியாகப் பேச வேண்டும் என்று கூறி அழகேந்திரனை, பிரபாகரன் அழைத்துச் சென்றுள்ளார். 

பின்னர் காதல் விவகாரம் குறித்துப் பேசியுள்ளனர். அப்போது தகராறு முற்றியதன் காரணமாக ஆத்திரமடைந்த பிரபாகரன் தான் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து அழகேந்திரனின் தலையைத் துண்டித்துள்ளார். பின்னர் உடலையும், தலையையும் அங்கேயே போட்டுவிட்டு பிரபாகரன் தப்பித்துச் சென்றுள்ளார்.

இதற்கிடையே அழகேந்திரனை ஆணவ படுகொலை செய்துவிட்டதாக  அவரது பெற்றோர் மற்றும் உறவினர், தமிழ் புலிகள் அமைப்பினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் பிரபாகரனை  கைது செய்த காவல்துறை அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

“இடைத்தேர்தல் புறக்கணிப்பு ஏன்?” - இ.பி.எஸ். விளக்கம்!

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
"Why the By-Election Boycott?" - EPS Explanation

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில்தான் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் (14.06.2024) விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

இந்த இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பா.ஜ.க கூட்டணியில் உள்ள பா.ம.க சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. '

"Why the By-Election Boycott?" - EPS Explanation

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அதிமுக போட்டியிடாதது குறித்து பேசுகையில், “விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தும். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அது போல விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடைபெற வாய்ப்பு உள்ளது. அதாவது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயகப் படுகொலை நடந்தது. அந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களை பட்டியில் அடைப்பதுபோல் செய்து திமுகவினர் முறைகேடு புரிந்தனர்.

திமுக ஆட்சியில் சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாத நிலை உள்ளதால் விக்கரவாண்டி இடைத்த் தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது. சுதந்திரமாக இடைத் தேர்தல் நடக்காது என்பதால்தான், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடைபெற வாய்ப்பு இல்லை. 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 200 சட்டமன்ற தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் எனத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுவது கனவு. அவரின் கனவு பலிக்காது. தேர்தல்களில் அரசியல் கட்சிகளுக்கு வெற்றி, தோல்வி மாறி மாறி கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.