Published on 24/08/2019 | Edited on 24/08/2019
பாலியல் புகாரில் கர்ணமகாராஜன் மீது மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளது பல்கலை கழக வளாகத்தில் பெரும் அதிர்ச்சியை ஆற்படுத்தியுள்ளது.
![k](http://image.nakkheeran.in/cdn/farfuture/iFkZXrcifnnK9wUMDQMUm0zRoOcwtoP7emt8DLEXgYs/1566618712/sites/default/files/inline-images/kana.jpg)
கடந்த டிசம்பர் மாதம் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவி இவர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். மாணவி யூனிமுத்து அளித்த புகாரை பேராசிரியர் வசந்தி தலைமையில் விசாரித்த ஆட்சி மன்றகுழு குற்றம் நிரூபிக்கபப்ட்டதால் பேராசிரியர் கர்ணமகாராஜனுக்கு கட்டாய ஓய்வு அளித்து உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது .
மதுரை காமராசர் பல்கலைகழக வரலாற்றில் பாலியல் புகாரில் இப்படியான நடவடிக்கை எடுத்தது முதல் முறையாகும். கர்ணமகராஜன், நிர்மலாதேவி விசயத்தில் சம்மந்தபட்ட வீடியோ, போட்டிக்கள் இவரது கட்டுபாட்டில் தான் இருந்து வந்தது. அவற்றை அழித்ததாக புகார் எழுந்தது. தற்போது பதிவாளர் தேர்வுக்கு இவரும் மனு அளித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.