
காஞ்சிபுரம் மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி பொது இடங்களில் பெண்களை கேலி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாமல்லபுரம், கோவளம் உள்ளிட்ட பகுதிகளில் கடலில் படகு சவாரி செய்ய அனுமதி கிடையாது என்றும், அதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காஞ்சிபுர மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களான வண்டலூர் உயிரியல் பூங்கா, வேடந்தாங்கல், மாமல்லபுரம், கோவளம், கிஷ்கிந்தா தீம் பார்க் போன்ற இடங்களில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 8 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 35 ஆய்வாளர்கள், 50 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 800 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, திருக்கழுக்குன்றம் சாலை, GST மற்றும் GWT சாலைகளில் 50 ரோந்து வாகனங்களின் மூலம் கண்காணிக்கவும் நடடிககை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.