தேனி அருகே திருமணமாகி 25 நாளில் மகனை குத்தி கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
![dindigul](http://image.nakkheeran.in/cdn/farfuture/piAALQiAWlehB50Y0pE6Ed8xgykYoaYWpe7MbBn-_-I/1570548171/sites/default/files/inline-images/sdvg.jpg)
தேனி அருகே உள்ள பூதிப்புரம் கோட்டைமேடு தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு இரண்டு மகன்கள் அதில் மலைச்சாமி பெரம்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ஜோதி என்பவருக்கும் கடந்த 25 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மலைச்சாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் அவரது மனைவி ஜோதி கோபித்துக் கொண்டு தனது தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மலைசாமியை அவரது தந்தை தங்கராஜ் கண்டித்துள்ளார்.
சம்பவத்தன்று குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த மலைச்சாமி தனது தந்தையிடம் மேலும் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த தங்கராஜ் தனது மகனை கழுத்து, கை, மணிக்கட்டு உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்த மலைச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி ஜோதி கொடுத்த புகாரின் பேரில் பழனி செட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜை கைது செய்தனர். புதுமாப்பிள்ளை தனது தந்தை கையாலேயே கொல்லப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/ouWsvZbKlqFC2aTEk392jjb0IS_kmeRVfA965-m-IIA/1570548389/sites/default/files/inline-images/500x300-article-inside_19.jpg)