Published on 24/08/2023 | Edited on 24/08/2023
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தலைமைச் செயலகமாக மாற்றப்படாது எனச் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தலைமைச் செயலகமாக மாற்றப்படாது. ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நோயாளிகள் அதிகளவில் வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்த புற நோயாளிகள் ஒரு நாளைக்கு சராசரியாக 400 பேர் வந்துகொண்டிருந்தனர். ஆனால் தற்போது 1400 முதல் 1500 வரை புற நோயாளிகள் வந்துகொண்டிருக்கின்றனர். மருத்துவ தேவையும், மருத்துவ சேவையும் அதிகரித்துக் கொண்டிருப்பதால் எந்த சூழ்நிலையிலும் ஓமந்தூரார் மருத்துவமனை தலைமைச் செயலகமாக மாறாது” என்றார்.