Skip to main content

காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு: பயிற்சி எஸ்.ஐ.கள் தற்கொலை முயற்சி!

Published on 10/08/2017 | Edited on 10/08/2017
காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு:
பயிற்சி எஸ்.ஐ.கள் தற்கொலை முயற்சி!


திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் காவல்துறை பயிற்சி உதவி ஆய்வாளராக திருச்செந்தூரில் உள்ளார். அதே போல திருச்சி பகுதியைச் சேர்த்தவரான வைத்தீஷ்வரி புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் காவல் நிலையத்தில் காவல்துறை பயிற்சி உதவி ஆய்வாளராக உள்ளார்.

பயிற்சி ஆய்வாளர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் ஜாதி பகையானது. வெவ்வேறு ஜாதிகள் என்பதால் குடும்பத்தினர் காதலுக்கு எதர்ப்பு தெரிவித்ததால் கார்த்திக் மற்றும் வைத்தீஸ்வரி இருவரும் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளனர். இதையடுத்து இருவரையும் மீட்டு திருச்சி சமயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  
- இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்