வேலூர் மாவட்டம் குடியாத்தம் காவல் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசாரின் தீவிர சோதனையால் கேரளா லாட்டரி சீட்டு விற்பனை முழுவதுமாக தடை செய்யப்பட்டு வந்தது. தற்போது குடியாத்தம் நகரம் சித்தூர் கேட் பகுதிகளில் லாட்டரி டிக்கெட் விற்பவர்கள் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
குடியாத்தம் நகரம் நெல்லூர்பேட்டை நாராயணசாமி தோப்புத்தெருவில் சில லாட்டரி ஏஜென்ட்கள் தங்களது வீட்டிலேயே வைத்து லாட்டரி விற்பனை செய்து வருகின்றனர். போலீஸார்க்கு சந்தேகம் வராமல் இருக்க வீட்டில் உள்ள தங்களது மனைவிகளை இந்த தொழில் இறக்கிவிட்டுள்ளனர் என்கின்றனர்.
கடைகள் வைத்து செய்த வியாபாரத்தை போலீஸாரால் சுலபமாக கண்டுபிடிக்க முடிந்தது. வீட்டில் வைத்து பெண்களை முன்னிலைப்படுத்தி செய்வதால் போலீசாரால் கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கின்றனர்.
காவல்துறை உடனடியாக நெல்லூர்பேட்டை உட்பட சிலயிடங்களில் வீட்டில் வைத்து லாட்டரி விற்பனையில் மக்களை பாதிப்படையச் செய்பவர்களை கைது செய்ய வேண்டும்மென அப்பகுதி மக்கள் வேண்டுக்கோள் விடுத்து வருகின்றனர்.