தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகளைகளையும் அடுத்த மாநிலத்தவர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டுவந்து அத்தனை அரசு வேலைகளையும் மொழி தெரியாதவர்களிடம் கொடுத்துவிட்டு தமிழக இளைஞர்களை வேலையில்லா பட்டதாரிகளாக வீதியில் அலையவிட்டிருக்கிறார்கள். அரசு வேலை மட்டுமின்றி தனியார் வேலைகளும் 50 சதவீதத்திற்கு மேல் வட இந்தியர்களுக்கு வழங்கிவிட்டு குறைந்த கூலி நிறைந்த வேலை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இது ஒரு பக்கம் என்றால் தமிழகம் முழுவதும் குண்டூசி முதல் அத்தனை பொருட்களை தெருத் தெருவாக நடந்து சென்று விற்ற வட இந்தியர்கள் கடந்த பல ஆண்டுகளாக நிரந்தரமாக தங்கி பெரிய பெரிக கடைகளை நடத்தி மொத்த வியாபாரமும் இவர்களே செய்கிறார்கள். தமிழர்களின் சிறுவணிகர்கள் கூட சேட்டு கடைகளில் வாங்கி தான் விற்க வேண்டிய நிலையை உருவாக்கிவிட்டார்கள்.
தமிழக வாடிக்கையாளர்களும் சேட்டுகடை பொருளையே வாங்கத் துடிக்கிறார்கள். இப்படி நாளுக்கு நாள் அந்நியர்களின் வருகை அதிகரித்துள்ளதால் தமிழக இளைஞர்கள் தொழிலாளர்கள், சிறு வணிகர்களின் வர்த்தகம் என அத்தனையும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் தமிழ்நேசன் தலைமையிலான தமிழ்ச்தேசியக் கட்சியினர் மார்வாடி கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று காலை புதுக்கோட்டையில் உள்ள 3 சேட்டு கடைகளுக்கு தமிழ்த்தேசியக் கட்சியினர் பூட்டுப் போட்டுவிட்டு அருகில் துண்டறிக்கைகளையும் ஒட்டி வைத்துவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடக்கம் தான் இன்னும் தமிழகம் முழுவதும் சேட்டு கடைகளுக்கு நிரந்தரமாக பூட்டுப் போடும் வரை ஓயமாட்டோம் என்று சொல்கிறார்கள் தமிழ்த் தேசியக் கட்சியினர்.