ஆசிரியர்கள் பணிக்கு வராததால் பள்ளியில் பாடம் நடத்தினார் கலெக்டர்
சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி நேற்று ஆத்தூர் அருகே கருத்தராஜாபாளையத்தில் உள்ள கிராம சேவை மைய கட்டிடத்தில் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஜாக்டோ-ஜியோ போராட்டம் நடந்ததால், ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் வகுப்புகளுக்கு வெளியே நின்று கொண்டு இருந்தனர்.
இதைப் பார்த்த கலெக்டர் ரோகிணி அந்த பள்ளிக்கு சென்றார். வெளியே நின்று கொண்டிருந்த மாணவ-மாணவிகளை வகுப்புகளுக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்தார். பின்னர் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அவர் ஆங்கில பாடம் நடத்தினார். அப்போது மாணவ-மாணவிகளின் சந்தேகங்களுக்கு அவர் பதில் அளித்தார்.