Skip to main content

சரிந்த எலுமிச்சை விலை! மகிழ்ச்சியில் சில்லரை வியாபாரிகள்! 

Published on 09/06/2022 | Edited on 09/06/2022

 

 lemon prices Fallen

 

ஈரோடு காய்கறி மார்க்கெட்டுக்கு கொடைக்கானல், திண்டுக்கல், பெரியகுளம், தேனி, கம்பம் போன்ற பகுதிகளில் இருந்து எலுமிச்சை பழம் விற்பனைக்காக வரத்தாகி வருகிறது. தினமும் மூன்று டன் வரை விற்பனைக்கு கொண்டு வரப்படும். இந்த நிலையில், திடீரென விளைச்சல் குறைந்ததால் மார்க்கெட்டுக்கு குறைந்த அளவே பழங்கள் விற்பனைக்கு வந்துகொண்டிருந்தன. எலுமிச்சை பழம் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. மேலும் கோடை காலம் என்பதால் அதன் தேவையும் அதிகரித்தது.

 

இதனால் எலுமிச்சை பழம் ஒரு கிலோ ரூபாய் 250 முதல் ரூபாய் 300 வரை விற்பனையானது. மேலும் கோவில் விசேஷங்கள் அதிக அளவில் தொடர்ந்து வந்ததால் எலுமிச்சை பழத்தின் தேவையும் அதிகரித்து. இந்நிலையில், மீண்டும் எலுமிச்சை பழம் விளைச்சல் அதிகரிக்க தொடங்கியது. இதனையடுத்து ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டுக்கு எலுமிச்சை பழங்கள் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. 


9ம் தேதி கொடைக்கானல், திண்டுக்கல், பெரியகுளம், தேனி, கம்பம், பெங்களூர், சேலம், கோவை, திருச்சி போன்ற பகுதிகளிலிருந்து எலுமிச்சை பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன. ஒரே நாளில் 5 டன் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. வரத்து அதிகரிக்க தொடங்கியதன் எதிரொலியாக விலையும் சரிய தொடங்கியது. இதனால் ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூபாய் 80-க்கு விற்பனையானது. சில்லறையில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.5-க்கு விற்பனையானது. ஒரு கிலோவில் 22 முதல் 25 எலுமிச்சை பழங்கள் உள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்