Skip to main content

இலங்கையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழகம், புதுவை படகுகள் விடுவிப்பு..! நஷ்ட ஈடு கேட்டு மீனவர்கள் கோரிக்கை..!!!

Published on 27/07/2018 | Edited on 27/07/2018


 

file

   

 இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை வசமுள்ள தமிழகம் மற்றும் புதுவையைச் சோந்த படகுகள் அனைத்தையும் விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளமைக்கு  மீனவர்கள் வரவேற்று தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளனர். அதே நேரத்தில் இலங்கை படகுத்தளத்தில் ஏறக்குறைய நான்கு வருடமாக கேட்பாரற்று கிடந்த, முற்றிலும் சேதமடைந்த படகுகளுக்கு நஷ்ட ஈடு வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

    இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து, தடைசெய்யப்பட்ட வலை பயன்படுத்தி  மீன்பிடிப்பில் ஈடுபட்டு கடல்வளங்களையும் மீன்வளத்தையும் அழித்ததாக இலங்கை கடற் படையினரால் கடந்த 2015 ஆம் ஆண்டு மே 10 ந் தேதி முதல 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்; வரை சிறைபிடிக்கப்பட்ட  ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, காரைக்கால் ஆகிய ஐந்து மாவட்டங்களை சேர்ந்த 174 படகுகளை விடுவிக்க அந்நாட்டு சட்டத்துறை அதிகாரிகள் உத்திரவிட்டது. இதனையடுத்து 168 தமிழக விசைபடகுகள் விடுவிக்கப்பட்டு இலங்கை வெளி விவகாரத்துறை அமைச்சத்திடம் ஒப்படைக்கட்டது மேலும் திருகோணமலை மற்றும் புத்தலம் பகுதியில் உள்ள படகுகள் அனைத்தையும் வரும் சனிக்கிழமைக்குள் விடுவிக்க வேண்டும் என இலங்கை சட்டத்துறை உத்திரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


    இந்நிலையில் கடந்த மாதம் தமிழகத்தில் இருந்து சிறைபிடிக்கப்பட்ட படகுகளை ஆய்வு செய்ய மீனவ குழு யாழ்பாணம் சென்ற மீனவ குழு படகுகளை ஆய்வு செய்ததில் 20 முதல் 30 படகுகள் மட்டுமே  திருப்பி எடுக்கும் நிலையில் உள்ளதாக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துவுள்ள நிலையில், முற்றிலும் சேதமடைந்த படகுளின் உரிமையாளர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மீனவர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்